பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணாடி மாளிகையை அலங்கரிக்கும் கற்றாழை: 'கொடை' பிரையன்ட் பூங்காவில்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 கண்ணாடி மாளிகையை அலங்கரிக்கும் கற்றாழை: 'கொடை' பிரையன்ட் பூங்காவில்

கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா கண்ணாடி மாளிகையை 40ஆண்டுகளாக கற்றாழை அலங்கரித்து வருகிறது.

குளு, குளு நகரான கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் பிரையன்ட் பூங்காவில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சியில் லட்சக் கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்தப் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு வயது 40 ஆகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண நிலையில் இருப்பதால் இங்கு எப்போதும் அழகு பூக்கள் பளிச்சிடும். அதில் இந்தியா, வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்றாழை வகைகள் அந்தப் பகுதியையே அழகுமிளிரச் செய்கிறது.

'கேக்டஸ்' வகையை சேர்ந்த ஒப்பன்சியா, எச்வீரீயா, சைனோசிரஸ், கிறிஸ்ட் பிளான்ட், அலோவேரிகேட்டா, அலோவீரா, உள்ளிட்ட 65 வகைகள் இக் கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்ட கற்றாழைகள், பல்வேறு வடிவங்களில், கோணங்களில் அழகுற அமைந்துள்ளன.

இதில் ஆண்டுதோறும் பூக்கள் பூத்தாலும், அவை 3 நாள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இவற்றின் கிளைச் செடிகள் மூலம் ஏராளமான கற்றாழைச் செடிகளை புதிதாக உருவாக்குகின்றனர். இவற்றை கற்றாழைதானே என்று கூற முடியாத அளவுக்கு இவற்றின் வனப்பு சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X