பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பிய குட்டை; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 நிரம்பிய குட்டை; விவசாயிகள் மகிழ்ச்சி

அவிநாசி:அவிநாசியில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால், கருக்கம்பாளையம் குட்டை நிரம்பியது.அவிநாசி, சேவூர், கருவலுார், பழங்கரை, நடுவச்சேரி உட்பட பல பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம், மாலை துவங்கி இரவு வரை, தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அப்பகுதியிலுள்ள குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன.அவ்வகையில், சின்னேரிபாளையம் ஊராட்சி, கருக்கம்பாளையம் குட்டை மழையால் நிரம்பியுள்ளது. அப்பகுதியினர் கூறுகையில், 'கடந்த, 3 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் குட்டை நிரம்பியுள்ளது,' என்றனர்.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கருக்கம்பாளையம் குட்டையில், 2016ல் 8.25 லட்சம் ரூபாய் செலவில் மரக்கன்று நடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2017 மே மாதம், 4.85 லட்சம் ரூபாய் செலவில் குட்டை துார்வாரப்பட்டது. அதன் பயனாக, தற்போது பெய்த மழையில் குட்டையில் நீர் நிரம்பி ததும்புகிறது.சேவூர் அருகே உள்ள ஒச்சாம்பாளையம் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர், கருக்கம்பாளையம் குட்டையில் சேகரமாகிறது. குட்டையில் நிரம்பும் தண்ணீர், கருமாபாளையம், செம்பாகவுண்டம்பாளையம் வழியாக சங்கமாங்குளம் வரை செல்கிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X