நத்தத்தில் கொரோனா பலி 2 ஆக உயர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் கொரோனா பலி 2 ஆக உயர்வு

Added : ஜூன் 27, 2020
Share

நத்தம்:நத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

நத்தம் வட்டாரம் கோசுகுறிச்சியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்து நத்தத்தில் ரெடிமேட் துணிக்கடை வைத்திருந்த 35 வயது நபர் ஒருவர் அடிக்கடி மதுரைக்கு சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதித்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நத்தத்தில் இருந்தபோது சிகிச்சைக்கு சென்ற தனியார் தனியார் மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட 7 பேருக்கும், உறவினர்கள் 8 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 20 ல் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நத்தம் வியாபாரி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் நத்தம் வட்டாரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X