அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணி: எம்.பி., - எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணி:  எம்.பி., - எம்.எல்.ஏ., ஆய்வு

திருப்பூர்:மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஆய்வு செய்தனர்.மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நவீன பஸ் ஸ்டாண்ட் வளாகம், வணிக வளாகம், மாநாட்டு அரங்கம், மார்க்ெகட் வளாகம், பல அடுக்கு வாகன பார்க்கிங் உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.இப்பணிகளை 'திஷா' கமிட்டி தலைவரான எம்.பி., சுப்பராயன், உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், குணசேகரன் நேற்று ஆய்வு செய்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் முகமது சபியுல்லா ஆகியோர் பணி நிலவரம் குறித்து விளக்கினர்.எம்.பி., கூறுகையில், 'திஷா கமிட்டி சார்பில் இப்பணிகள் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு, பணிகள்மேற்கொள்ளப்படும் விவரம், மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அலுவலக ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X