பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:வங்கி சேவை எட்டாக்கனியாக மாறிவிடும் என்பதால், பூலுவப்பட்டியில் உள்ள வங்கி கிளை இடமாற்றத்தை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் சார்பில், 'புதிய தடம்' அமைப்பு நிர்வாகி சுந்தரமுத்து, கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:நெருப்பெரிச்சல், செட்டிபாளையம் கிராமங்களில், தேசியமயமாக்கப்பட்ட வேறு வங்கிகள் இல்லை. மொத்தம், 50க்கும் அதிகமான குக்கிராம மக்கள் பயன்பெறுகின்றனர். வங்கி சேவை பெற, பெருமாநல்லார் அல்லது திருப்பூர்தான் செல்ல வேண்டும்.எனவே, வங்கி இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும். வங்கி நிர்வாகத்தின் அவசர முடிவை நிறுத்தி வைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் திட்ட அறிவிப்புகளுக்கு எதிர்மாறாக, வங்கி இடமாற்றம் அமைந்துவிடும். பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, வங்கி கிளை திருப்பூருக்கு இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X