பொது செய்தி

தமிழ்நாடு

'இலவச மின்சாரம் தொடரணும்' கையெழுத்து இயக்கம் துவக்கம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 'இலவச மின்சாரம் தொடரணும்' கையெழுத்து இயக்கம் துவக்கம்

பல்லடம்:பல்லடம் அருகே, இலவச மின்சாரத்தை வலியுறுத்தி, விவசாயிகள் கையெழுத்து இயக்கம் துவக்கினர்.மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால், இலவச மின்சாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.இதனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலவச மின்சாரம் தொடர வலியுறுத்தும் வகையில், பல்லடம் கே.அய்யம்பாளையத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில், விவசாயிகள் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கோரிக்கை நிறைவேறும் வரை இணைந்து போராடுவது என, விவசாய தியாகிகள் நினைவிடத்தில், விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உ.உ., கட்சி உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள், மற்றும் மின்சார கட்டணத்திற்காக போராடி இறந்தவர்களின் குடும்பத்தினர், விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X