சமூக விரோத செயல்களால் சமத்துவபுரத்தில் சங்கடம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 சமூக விரோத செயல்களால் சமத்துவபுரத்தில் சங்கடம்

பல்லடம்:பல்லடம் அருகே சமத்துவபுரத்தில், சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாதப்பூரில், 2009ல் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. அதில், சமூக விரோத செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், தாசில்தாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பயனடைய வேண்டி, சமத்துவபுரம் ஏற்படுத்தப்பட்டு, நுாறு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. தற்போது அரசு வழங்கிய வீடுகளில், உண்மை பயனாளிகள் யாரும் இல்லை. வீடுகளை வாடகை, மற்றும் போக்கியத்துக்கு விட்டும், சட்ட விதிமுறை மீறி விற்பனை செய்தும் உள்ளனர்.அரசு ஒதுக்கிய பயனாளிகள், வேறெங்கோ குடியிருந்து கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக வாடகை வசூல் செய்து வருகின்றனர். இதனால், சமத்துவபுரத்தில், சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. எனவே, சட்ட விரோதமாக குடியிருப்பவர்கள் அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X