ஒன்றிய அலுவலகத்தில் ஒரே அறைக்கு மல்லுக்கட்டு: பி.டி.ஓ., - தி.மு.க.,வினர் வாக்குவாதம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 ஒன்றிய அலுவலகத்தில் ஒரே அறைக்கு மல்லுக்கட்டு: பி.டி.ஓ., - தி.மு.க.,வினர் வாக்குவாதம்

பழநி:பழநி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையை, ஒன்றிய தலைவருக்கு ஒதுக்கும்படி கேட்டு தி.மு.க.,வினர் தகராறு செய்தனர்.

பழநி ஒன்றிய தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த ஈஸ்வரி உள்ளார். ஒன்றிய அலுவலகத்தில் கடந்த முறை ஒன்றிய தலைவருக்கு ஒதுக்கிய அறையை பி.டி.ஓ., பயன்படுத்தி வந்தார். அந்த அறையை தற்போதைய தலைவருக்கு ஒதுக்கும்படி தி.மு.க.,வினர் கேட்டனர்.

அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன் தலைவருக்கு அறையை ஒதுக்கினர்.இந்நிலையில் நேற்று திடீரென அந்த அறையை பி.டி.ஓ., பயன்படுத்த துவங்கினார். அதிர்ச்சி அடைந்த தி.மு.க.,வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ஒன்றியத்தலைவர் ஈஸ்வரி கூறுகையில், ''நான் பயன்படுத்திய அறையின் பூட்டை உடைத்து, பொருட்களையும், பெயர்ப் பலகையும் மாற்றி வைத்து விட்டனர். பி.டி.ஓ.,விடம் கேட்டால், நான் பெண் என்பதால் பதில் தர மறுக்கிறார்'' என்றார்

இதுபற்றி அறிந்த தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., பயன்படுத்த துவங்கிய அறைக்குள், தலைவரின் நாற்காலியை கொண்டு சென்று அமர முயற்சித்தனர். இதனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையில் தலைவர் தலைமையில் அவசர கூட்டமும் நடத்தப்பட்டது.

இதில், 'ஒன்றிய அலுவலகத்தில் அறைகள் ஒதுக்கீடு செய்ய தலைவருக்கு அதிகாரம் வழங்குவது, தலைவரின் அறையை மாற்றியது மற்றும் அவசர கூட்டத்திற்கு வருகை பதிவேடும் வழங்காத பி.டி.ஓ.,வுக்கு கண்டனமும் தெரிவிப்பது'' எனத் தீர்மானித்தனர். இதனை ஆதரித்து அ.தி.மு.க.,வினரும் கையெழுத்திட்டனர்.இதுபற்றி பி.டி.ஓ., கூறுகையில், மேலதிகாரிகள் உத்தரவுப்படிதான் செயல்படுவேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X