பொது செய்தி

தமிழ்நாடு

'நூல் விலை கட்டுக்குள் இருந்தாலே போதும்!' எம்.பி.,யிடம், 'சைமா' தலைவர் வலியுறுத்தல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தினால் போதும், வர்த்தக சவால்களை எளிதாக எதிர்கொள்ளலாம் என, 'சைமா' தலைவர் ஈஸ்வரன்,எம்.பி.,யிடம் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரின் கோரிக்கை குறித்து அறிய,எம்.பி., சுப்பராயன், நேற்று முன்தினம், 'சைமா' சங்க அலுவலகத்தில், சங்க தலைவர் ஈஸ்வரன், துணை தலைவர் கோவிந்தப்பன், பொதுச்செயலாளர் பொன்னுசாமியுடன் கலந்துரையாடினர்.'சைமா' தலைவர் ஈஸ்வரன், எம்.பி.,யிடம் கூறியதாவது:திருப்பூர் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மிக கடுமையான வர்த்தக போட்டிகளை எதிர்கொள்கின்றன. வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள், குறைந்த விலைக்கு ஆடைகளை சந்தைப்படுத்துகின்றன.அரசிடம், சலுகைகளை கேட்டுப்பெறுவதால் மட்டும், வர்த்தக போட்டிகளை எதிர்கொள்ள முடியாது. உற்பத்தி செலவை குறைக்க வேண்டும். பஞ்சு, நுால் விலையில் ஏற்படும் திடீர் உயர்வு, ஆடை உற்பத்தி துறையை மிகவும் பாதிக்க செய்கின்றன.நுால் விலை குறையும்போது, ஏற்கனவே அனுப்பிய ஆடைகளுக்கான விலையை கூட, வெளிமாநில வர்த்தகர்கள் குறைக்கின்றனர். ஆர்டர் பெறும்போது உள்ள நுால் விலை, உற்பத்தியின்போது உயர்ந்து விடுகிறது. இதனால், உற்பத்தி செலவினம் அதிகரிக்கிறது.ஆடை தயாரிப்பில், நுால், சாயமேற்றுதல் இரண்டும் மிகப்பெரிய செலவு. மத்திய, மாநில அரசுகள், குறிப்பிட்ட கட்டணம் பெற்றுக்கொண்டு, சாயநீரை சுத்தி கரித்து, துாய நீரை, கடலில் கொண்டு சேர்க்க வேண்டும். பஞ்சு, நுால் விலைகளை சீர்படுத்துதல்; சாயக்கழிவுநீரை அரசே சுத்திகரிப்பதன் மூலமாக மட்டுமே, ஆடை உற்பத்தி செலவினத்தை பெருமளவு குறைக்க முடியும்.இதன்மூலம், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், உள்நாடு, வெளிநாட்டு சந்தையில் நிலவும் வர்த்தக போட்டிகளை மிக எளிதாக எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.எம்.பி., பேசுகையில், 'தொழில் துறையினரின் கோரிக்கையை, மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X