ஒன்றிய அலுவலகம் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகம் மூடல்

Added : ஜூன் 27, 2020
Share
 ஒன்றிய அலுவலகம் மூடல்

நிலக்கோட்டை:நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 58 வயதுடைய பெண் சமூக நல அலுவலராக உள்ளார். சில நாட்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாததால், விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தார். மதுரை தனியார் மருத்துவமனைக்கு சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. பி.டி.ஓ.,க்கள் லாரன்ஸ், செல்வராஜ் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் பரிசோதனை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X