பொது செய்தி

தமிழ்நாடு

மருந்துக்கடை அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மாவட்டத்தில், 850 மருந்து கடைகள், மூன்று மணி நேரம் அடைக்கப்பட்டன.சாத்தான்குளத்தில், தந்தை, மகன் என இருவர் இறந்த சம்பவத்தில், போலீசாரின் அத்துமீறலே காரணம் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது, வழக்குப்பதிய வேண்டுமென, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று, தமிழகம் முழுவதும், கடை அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.இதற்கு மருந்து வணிகர் சங்கமும் முழு ஆதரவு அளித்தது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், நேற்று காலை, 7:00 முதல், 10:00 மணி வரை, 850 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் அசோகன் கூறுகையில், ''மூன்று மணி நேரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டன,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X