பொது செய்தி

தமிழ்நாடு

எந்த நிகழ்ச்சிக்கும் 5 பேருக்கு மேல் அனுமதியில்லை: எஸ்.பி.,

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:ஆர்ப்பாட்டம், போராட்டம் உட்பட எந்த நிகழ்வுக்கும் 5 பேருக்கு மேல் அனுமதியில்லை என, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, அரசியல், சாதி, மத உட்பட பிற அமைப்புகளால் நடத்தப்படும் ஆர்பாட்டம், போராட்டம் உட்பட 5 பேருக்கு மேல் கூடும் எந்த நிகழ்விற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்போர் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. நிகழ்வுகளுக்கு வாகனங்களில் வருவோர் விதியை மீறி கூட்டமாக வருகின்றனர்.

இதனால் கொரோனா தொற்று வருவதோடு, தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீசார், வருவாய் துறையினர் உள்பட பிறதுறை ஊழியர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதுஎனவே, இது போன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் தவிர்த்து போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X