பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று கட்டுப்பட மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்: சிறப்பு அலுவலர் கருத்து

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 தொற்று கட்டுப்பட மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்:  சிறப்பு அலுவலர் கருத்து

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலராக முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று திருச்சி மாவட்ட எல்லை அருகே உள்ள தங்கம்மாப்பட்டி சோதனைச்சாவடி, பரிசோதனை மையம், வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு நடத்தினார். திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, சுகாதார துணை இயக்குனர் ஜெயந்தி உடனிருந்தனர்.

சிறப்பு அலுவலர் கூறியதாவது:

கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நோய் பரவாமல் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவத்துறை சார்பில் மக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் வருவோர் எல்லைகளில் தொற்று சோதனைக்குட்படுத்தப்படு கின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்தினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்திட முடியும்.' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X