சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயற்சி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், கூடுதலாக அபராதம் வசூலித்ததாக கூறி, தனியார் நிதி நிறுவனம் முன், ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்படுகிறது. கொரோனா நேரத்தில் அரசின் அறிவுரைகளை பின்பற்றாமல், அபராதத்துடன் கூடுதலாக வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், திருப்பூர் - பூலுவப்பட்டி, தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த ஜெயமணி, 34 என்பவரின், வங்கி கணக்கில் இருந்து கூடுதலாக பணத்தை, நிதி நிறுவனம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அவர் நேற்று மாலை அந்நிறுவனத்துக்கு சென்றார்.தயாராக கொண்டு போன, டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். தகவலறிந்து வந்த வடக்கு போலீசார் தடுத்து நிறுத்தி அவரை ஸ்டேஷன் அழைத்து சென்றனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X