சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் ஒரேநாளில் 47 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் நேற்று 5 போலீசார் ,அவரது குடும்பத்தினர் உட்பட 47 பேர்
கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

குமுளி சோதனை சாவடியில் பணி செய்த 34 வயது, 27 வயது போலீஸ்காரர்கள், அல்லிநகரம் ஸ்டேஷனில் 49 வயது எஸ்.எஸ்.ஐ., கம்பம் வடக்கு ஸ்டேஷன் 34 வயது போலீஸ்காரர்,
கூடலுார் தெற்கு ஸ்டேஷன் 48 வயது எஸ்.எஸ்.ஐ., என ஐந்து பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

இதில் பெரியகுளத்தில் வசிக்கும் எஸ்.எஸ். ஐ.யின் 40 வயது மனைவி, 12 வயது, 17 வயது
மகன்கள், அல்லிநகரத்தில் பணியாற்றிய மற்றொரு எஸ்.எஸ்.ஐ.யின் 20 வயது மகள் ,12 வயது மகன் ஆகிய 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கூடலுார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரின் 27 வயது தற்காலிக டிரைவர், மதுரை தனியார் மருத்துவமனையில் பணியாற்றும்
முத்தாலம்பாறையை சேர்ந்த 20 ஆண், கம்பம் தனியார் வங்கி உதவி மேலாளர், ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டனர்.

பெரியகுளம் தென்கரை அங்காளஈஸ்வரி கோயில் தெரு 26 வயது ஆண், சென்னையில் இருந்து வந்த டொம்புசேரி 25 வயது ஆண், சின்னமனுார் பழனியாண்டவர் தெரு 18 வயது பெண், போடி சர்ச் மெயின் தெருவை சேர்ந்த 13 வயது சிறுமி, கம்பம் புதுப்பட்டி தந்தையின் பாதிப்பால் அவரது ஆறு வயது சிறுமி, இதே ஊரை சேர்ந்த பிச்சாண்டியம்மன் கோயில் தெரு 6 வயது சிறுமி,
பெரியகுளம் வடகரை புகையிலை தோட்டம் 12 வயது சிறுமி, பெரியகுளம் ஜெ.ஆர்.ஆர். நகர் 32 வயது ஆண், பழனிச்செட்டிபட்டி 54 வயது அரசு பஸ் கண்டக்டர் உட்பட மொத்தம் 47 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாவதால் போடி அரசு பொறியியல் கல்லுாரி விடுதி, தேனி தனியார் பொறியியல் கல்லுாரி விடுதிகளை கொரோனா வார்டுகளாக மாற்ற தயார்
செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X