ஆண்டிபட்டிக்கு வைகை அணை குடிநீர் வருமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டிக்கு வைகை அணை குடிநீர் வருமா

Added : ஜூன் 27, 2020
Share

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.குன்னுார் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து இருந்தால் மட்டுமே குடிநீருக்கான உறை கிணறுகளில் தேவையான நீர் சுரப்பு இருக்கும். வறட்சியான காலத்தில் அனைத்து பகுதிக்கும் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள 'போர்வெல்'களில் கிடைக்கும் நீரை பயன்படுத்துகின்றனர்.

ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் சில ஊராட்சிகளுக்கு மட்டும் குறைந்தளவு பிரித்து வழங்கப்படுகிறது. கோடையில் குடிநீருக்காக பல கிராமங்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பான வைகை அணையில் இருந்து இங்குள்ள அனைத்து கிராமங்களும் பயன்படும்படியான புதிய குடிநீர் திட்டத்திற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய தலைவர் லோகிராஜன்தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X