தமிழ்நாடு

ஒதுக்கீடு: சிறுதானிய சாகுபடிக்கு ரூ.50.15 லட்சம் திண்டுக்கல் வேளாண் அதிகாரி அறிவிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:வேளாண் துறை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய திட்டத்திற்கு ரூ.50.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.50.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகிய பயிர்களின் சாகுபடியை 77 ஆயிரத்து 500 எக்டேராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயல்விளக்க திடல் அமைக்க எக்டேருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.16.50 லட்சம் ஒதுக்கியுள்ளனர்.

விதை நேர்த்தி மருந்து, நுண்ணுட்டச்சத்து, உயிர் உரங்கள், உயிர் உரங்கள் ஆகியவை
விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. வீரிய விதைகளாகிய சோளம், கம்பு விநியோகத்திற்கு ரூ.3 லட்சம், உயர் விளைச்சல் ரக விதை விநியோகத்திற்கு ரூ.3.30 லட்சம், விதை உற்பத்தி விநியோகத்திற்கு ரூ.6 லட்சம், நுாண்ணுட்டச்சத்து விநியோகத்திற்கு ரூ.5.50 லட்சம், உயிர் உரம், பயிர் பாதுகாப்பிற்கு ரூ.7.16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை கூறுகையில், ''சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X