பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 34 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 393 ஆக உயர்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கோவை;கோவையில் ஒரே நாளில், 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.கோவையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 347ல் இருந்து 393 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் நேற்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பிறந்து 45 நாட்களே ஆன, பெண் குழந்தை ஒன்றுக்கு, கடந்த 24ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. குழந்தைக்கு குடல் அடைப்பு பிரச்னையும் இருந்ததை அடுத்து, இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்கு பின், குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.நேற்றைய பாதிப்பு விபரம்கோவை நேருநகர், கணபதியை சேர்ந்த 40 மற்றும் 48 வயது ஆண்கள்; ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த, 56 வயது ஆண்; ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை; ஒண்டிப்புதுாரை சேர்ந்த 34, 54 வயது ஆண் பெண்; விஸ்வாசபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், சுந்தராபுரத்தை சேர்ந்த 31 வயது பெண்;ரத்தினபுரியை சேர்ந்த 47 வயது ஆண்; வீரபாண்டி பிரிவை சேர்ந்த 33 வயது பெண்; காரமடையை சேர்ந்த 63 வயது மூதாட்டி; புதுப்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண்; ஆர்.எஸ்.புரம் தனியார் குடியிருப்பில் வசிக்கும், 30, 53 வயது பெண்கள்மற்றும் 55 வயது ஆண்;கே.கே.புதுாரை சேர்ந்த 48, 20 வயது பெண்கள், 10 வயது சிறுவன் மற்றும் 24 வயது ஆண்; கோவில்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது பெண்; இருகூர் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண்; தெலுங்கு வீதியை சேர்ந்த 55, 47,60 வயது பெண்கள், 68, 39 வயது ஆண்கள்; காந்திபுரம் பட்டேல் ரோட்டை சேர்ந்த 49 வயது ஆண்; அசோகபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண்; காமராஜர் வீதி, கே.கே.புதுாரை சேர்ந்த 21, 34 வயது ஆண்கள், 19, 40 வயது பெண்கள்; சண்முகராஜபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X