சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்வளா சாலையில் கரடி: மக்கள் நடமாடுவதில் சிக்கல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 மார்வளா சாலையில் கரடி:  மக்கள் நடமாடுவதில் சிக்கல்

கோத்தகிரி:கோத்தகிரி மார்வளா சாலையில், கரடி நடமாடி வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கோத்தகிரி எம். கைகாட்டி பகுதியில், தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள், அவ்வப்போது, சாலையில் உலா வருவது தொடர்ந்துள்ளது.இச்சாலையில், கடந்த ஒரு வாரமாக, கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியில் வரும் கரடி, சாலையில் நடமாடி, வாகனங்கள் வந்து செல்லும் போது, தோட்டத்திற்குள் சென்று பதுங்குகிறது.பெரும்பாலான நேரங்களில், தேயிலை தோட்டத்தில் உள்ள காட்டேஜ் படிக்கட்டுகள் வழியாக, மொட்டை மாடிக்கு சென்று படுத்து விடுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தோட்டம் பணிகளை, அச்சத்திற்கு இடையே, செய்து வருகின்றனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X