பொது செய்தி

தமிழ்நாடு

117 பழங்குடியின கிராமங்களில் 'ஆர்சினிக் ஆல்பம்':நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 117 பழங்குடியின கிராமங்களில் 'ஆர்சினிக் ஆல்பம்':நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை

பந்தலுார்;பந்தலுார், கூடலுார் தாலுகாவில் 117 பழங்குடியின கிராமங்களில் ஒரே நேரத்தில் 'ஆர்சினிக்ஆல்பம்-30' மாத்திரைகள் வழங்கப்பட்டன.பந்தலுார், கூடலுார் தாலுகாவில் உள்ள, 117 பழங்குடியின கிராமங்களில் ஒரே நேரத்தில், ஆர்சினிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எருமாடு அருகே நரிவளர்ப்பு பழங்குடியின கிராமத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுந்தரம் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்து பேசுகையில்,''தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஓமியோபதி மருத்துவம் மூலம், 'ஆர்சினிக் ஆல்பம்-30' எனும் மாத்திரை வழங்கப்படுகிறது,'' என்றார்.கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், பந்தலுார் தாசில்தார் மகேஸ்வரி ஆகியோர் மாத்திரைகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் காமு, பண்டைய பழங்குடியினர் அமைப்பின் தலைவர் முராரி உட்பட பலர் பங்கேற்றனர். சேவாபாரதி மாநில ஒருங்கிணைப்பாளர் உண்ணிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X