பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகளுக்கு ரூ. 20 லட்சம் கடன்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 வியாபாரிகளுக்கு  ரூ. 20 லட்சம்  கடன்

ஊட்டி:ஊட்டி நகராட்சி மார்க்கெட், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு, 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.ஊட்டி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், 81 கடைகள் எரிந்து சேதமானது. நகராட்சி சார்பில் சேதமான கடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தொழில் தொடங்க உதவி செய்ய நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மத்திய கூட்டுறவு வங்கி மூலம், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கோவிட் -19 சிறப்பு கடன் திட்டம் மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் நடந்தது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பயனாளிகளுக்கு கடன் வழங்கினார். அதன்படி, 50க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு, அவர்களின் தேவைக்கேற்ப, 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத், மேலாண்மை இயக்குனர் வசந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X