பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 2ம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தம் செய்ய முடிவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

குன்னுார்:பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளை, தனியார்மயப்படுத்தும் முடிவுக்கு தீர்வு காணாவிட்டால், ஜூலை, 2க்கு பிறகு வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அனைத்திந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை சி.எப்.எல்.யு., பொதுச்செயலாளர் ஹரிஹர சுப்ரமணி அறிக்கை:மத்திய அரசின், 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி, பின்னர் தனியார்மயப்படுத்தும், மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு எதிராக, காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு, வாக்கெடுப்பு நடத்தியதில், 99 சதவீதம் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, அனைத்திந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.பரிசீலனை செய்யவில்லை எனில் ஜூலை, 2ம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தம் துவங்கப்படும்.இவ்வாறு, ஹரிஹரகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X