தமிழ்நாடு

வீட்டுப்படி தாண்டினாலே கொரோனா தொற்றும் மதுரை வீதியெல்லாம் வைரஸ் உலா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
வீட்டுப்படி தாண்டினாலே கொரோனா தொற்றும்  மதுரை வீதியெல்லாம் வைரஸ் உலா

மதுரை: மதுரையில் வீதியெல்லாம் கொரோனா வைரஸ் உலா வருவதால், மக்கள் வீட்டு வாசல் படி தாண்டினாலே பாதிப்பு தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே தேவையின்றி யாரும் வெளியில் வராதீர்கள்.
மாவட்டத்தில் கொரோனா ஆட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியம், பரவை பேரூராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் ஒரு மண்டலம் என்று இல்லாமல், பரவலாக அனைத்து பகுதிகளிலும் வைரஸ் பரவிவிட்டது. பாதிக்காத பகுதிகள் சில தான். இச்சூழலில் ஊரடங்கை அலட்சியம் செய்தால் இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். வீடுகளை விட்டு வெளியில் வந்தாலே வைரஸால் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.தேவையின்றி வெளியில் திரிவதை மக்கள் தவிர்க்க வேண்டும். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெளியில் வருவது ஆபத்தில் முடிந்துவிடும். தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் அத்தியாவசிய தேவைக்கு வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் வருவது நலம். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை அலட்சியம் செய்யாதீர். சில நிமிடங்கள் காத்திருந்து பொருட்கள் வாங்குவதால் தவறில்லை. அத்தியாவசிய தேவைக்கு செல்வோர் வீடு திரும்பியதும் நன்றாக சோப்பால் கைகளை கழுவ வேண்டும்.மார்ச் இறுதி முதல் ஏப்ரல் வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மதுரைவாசிகள் சிறப்பாக கடைபிடித்தனர். அப்போது மதுரையில் பாதிப்பு குறைவு தான். இப்போது உச்சத்தில் உள்ளது. எனவே பழைய கட்டுப்பாட்டை மீண்டும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


'84284 25000'


என்ற அலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். இது மாநகராட்சி உதவி மைய தொடர்பு எண். யாருக்காவாது காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால் தொடர்புகொள்ளலாம். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இது மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X