'85,000 பேரை காப்பாற்றிய ஆதித்யநாத்'

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
லக்னோ,: '' உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்ததால், 85 ஆயிரம் பேர் உயிர் பிழைத்துள்ளனர்,'' என, பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.தடுப்பு நடவடிக்கைபிரதமர் மோடி, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 'ஆத்ம நிர்பார் ரோஜ்ஹர் அபியான்' திட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, உ.பி., தலைநகர்,
Yogi Adityanath, pm modi, coronavirus lockdown, uttar pradesh, up government, migrants,
'85,000 பேரை காப்பாற்றிய ஆதித்யநாத்'

லக்னோ,: '' உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்ததால், 85 ஆயிரம் பேர் உயிர் பிழைத்துள்ளனர்,'' என, பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.


தடுப்பு நடவடிக்கை



பிரதமர் மோடி, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 'ஆத்ம நிர்பார் ரோஜ்ஹர் அபியான்' திட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, உ.பி., தலைநகர், லக்னோவில் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:யோகி ஆதித்யநாத் அரசு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில், 24 கோடி மக்கள் உள்ளனர்.


latest tamil news




இது, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் மொத்த மக்கள் தொகையாகும். ஆனால், அந்நாடு களில், கொரோனாவால், 1.30 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அனைத்து வசதிகளும் உள்ள அமெரிக்காவில், பலி, 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது. யோகி ஆதித்யநாத் மற்றும் அரசு அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, உ.பி.,யில், 85 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பர். உ.பி., அரசின் கடுமையான உழைப்பால், அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


வேலைவாய்ப்பு



இதில், சிறப்பு ரயில்கள் மூலம்,வெளி மாநிலங்களில் இருந்து, 30 - 35 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள், உ.பி., வந்த நிலையில் நடைபெற்றது தான், சாதனையாகும்.யோகி ஆதித்யநாத், தன் தந்தையின் ஈமச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இது சாத்தியமாயிற்று.எந்த பிரச்னையையும் துணிந்து எதிர்கொள்வோர் வெற்றி பெறுவர்.இதில், உ.பி., உலகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த வகையில், கொரோனா தாக்குதலை, உ.பி., அரசு மிகச்சிறந்த வாய்ப்க பயன்படுத்தியுள்ளது. இது, 2017க்கு முன், உ.பி.,யை ஆண்ட அரசுகளிடம் பார்த்திராதது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூன்-202013:30:56 IST Report Abuse
தமிழவேல் ஆசிரியரே, தமிழ் பத்திரிகையில் 'ஆத்ம நிர்பார் ரோஜ்ஹர் அபியான்' இதுபோல எழுதும்போது, பக்கத்திலேயே அடைப்புக்குறியில் () தமிழாக்கமும் செய்து வெளியிடுவது பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும். நன்றி
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் சரி 85000 பேரைக் காப்பாத்தியாச்சு மிச்சமுள்ள பல கோடி பேர் அவுட்டா? நல்ல சொல்லறாங்கப்பா டீடெய்லூ!!!
Rate this:
27-ஜூன்-202021:39:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஇங்கே கருத்து எழுதும் பலரில் நீங்க மட்டும்தான் பிறவி ஞானம் பெற்றவர்...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜூன்-202011:09:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni பொறுப்புள்ள மனிதநேசத்தையே காட்டுறது ஆந்திராலே செத்துபோன ஒரு பெரியவரை குப்பையாட்டம் அள்ளிண்டு போறானுக கேவலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X