பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் 200 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை மையம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், 200 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், தொற்று ஏற்படும் நபர்களுக்கு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை, 56 ஆனது. இம்மாவட்டத்தில் ஆரம்ப நிலை தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவையில், நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''தனியார் தொழிற்சாலையில் அதிகாரிக்கு ஏற்பட்ட தொற்றால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு பரிசோதனை முடிவு வெளியாக வேண்டி உள்ளது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், ஆரம்ப நிலை தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, 200 படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைமையம், 35 வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X