பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலையில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 உடுமலையில் ஒரே குடும்பத்தில்  4 பேருக்கு கொரோனா

உடுமலை:உடுமலையில், ஒரே குடும்பத்தைச்சேர்ந்த, இரு குழந்தைகள் உட்பட நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், மாத்துாரில், மொபைல் கடை வைத்திருந்த, 30 வயது நபர், அவரது 30 வயது மனைவி மற்றும் 5,7 வயதுடைய இரு மகன்களுடன், திருப்பூர் மாவட்டம், உடுமலை, வி.வி.லே-அவுட்டில் வசித்து வரும், தனது 50 வயதுடைய தாயை பார்க்க, வந்தார்.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு, 24ல், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 26ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நான்கு பேரும் கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நகராட்சி சுகாதாரதுறையால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வீடு உள்ள வீதி, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. 15 பேரின், சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.உடுமலை பகுதியில், கடந்த இரு வாரத்தில் ஒன்பது பேருக்கு தொற்று பாதித்துள்ளதால், சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X