பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை வளர்ப்பு மேம்பாடு: மத்திய அரசு புதிய திட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:கால்நடை வளர்ப்புத்துறையை மேம்படுத்தவும், 35 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மத்திய அரசு புதிய திட்டத்தைத் துவங்கியுள்ளது.அரசு அதிகாரிகள் கூறியதாவது:கால்நடை வளர்ப்புத்துறையில், முதலீடுகளை மேம்படுத்தும் வகையில், 'கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதி' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு தொழில் மேம்படத் தேவையான கட்டமைப்புகள், பால் பண்ணை, கால்நடைத்தீவனம், இறைச்சிப் பதப்படுத்தும் ஆலைகள் போன்றவற்றுக்கு நிதியுதவி வழங்கப்படும்.குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையினர், தனியார் நிறுவனத்தினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிப்பட்ட தொழில்முனைவோர் உள்ளிட்ட கால்நடை வளர்ப்புத்துறை தொடர்புடையவர்கள் பயனாளிகளாக இருப்பர். நிதியுதவிக்கு மூன்று சதவீதம் வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இதன் மூலம், 35 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X