அரியானா, மேகாலயா, லடாக்கில் நிலநடுக்கம்:பொதுமக்கள் அச்சம்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி:ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நேற்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



அரியானாவின் ரோக்தக் நகர் அருகே நேற்று பிற்பகல் 3.32 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானது. அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேகாலயாவின் துரா நகரில் இருந்து மேற்கே 79 கி.மீ. தொலைவில் நேற்று மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.


latest tamil news



இதேபோல், லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, லடாக் மற்றும் சத்தீஸ்கர் என கடந்த 4 நாட்களுக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202006:24:13 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அப்படியே சீனன் உட்கார்ந்திருக்கும் பகுதியாகிய கால்வான் பள்ளதாக்கிலும் வரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X