தனிமைப்படுத்தியும் அலட்சியம்: ஊர் சுற்றிய 10 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தியும் அலட்சியம்: ஊர் சுற்றிய 10 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 27, 2020
Share

குன்னுார்:குன்னுார் எல்லநள்ளியில் தனிமைப்படுத்தியும், வெளியே சுற்றிய, 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், தற்போது கொரோனா பாதிப்பு, 56 ஆக அதிகரித்துள்ளது. எல்லநள்ளி தனியார் ஊசி தொழிற்சாலை, மக்கள் தொடர்பு அதிகாரிக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. இதனால், தொடர்பில், இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வீடுகளில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், அதில், பலர் வெளியில் சுற்றுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் வந்தது. கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவின்படி, கேத்தி வருவாய் ஆய்வாளர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நேற்று ஆய்வு செய்தனர். இதில், இரு பெண்கள் உட்பட ஒன்பது பணியாளர்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்து தனிமைப்படுத்திய, டிரைவர் ஒருவர் என, 10 பேர் வெளியில் சுற்றியது தெரியவந்தது.அவர்கள் மீது, நோய் பரப்புதல் பிரிவில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X