சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 கர்ப்பிணி உட்பட 14 பேருக்கு கொரோனா :திருப்பூரில் பாதிப்பு 141 ஆக உயர்ந்தது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:இரண்டு கர்ப்பிணிகள் உட்பட, நேற்று ஒரே நாளில், 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், திருப்பூர் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை, 141 ஆக உயர்ந்துள்ளது.திருப்பூரில் கொரோனா பாதிப்பு, 128 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தில் இருந்து வந்த, இருவர் அந்தந்த மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், 126 ஆக குறைந்தது. நேற்று ஒரே நாளில், 14 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு, 141 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில், 117 பேர் குணமாகிவிட்டனர்.
ஒருவர் பலியானார். 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருப்பூரில் இருந்து, திருவள்ளூர் சென்று வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த, 30 வயதுள்ள கணவன் மனைவி மற்றும், ஏழு மற்றும், நான்கு வயதுள்ள மகன்கள், குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த 65 மற்றும் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்த, 66 வயதுள்ள ஆண்கள், உடுமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும், 53 வயது செவிலியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் நகராட்சி பணியாளர்களுடன் தொடர்பில் இருந்த, 50, 30, 35, 25 வயது ஆண்கள், திருச்சியில் இருந்து பூலுவபட்டிக்கு வந்த, 34 மற்றும் தேனியில் இருந்து அவிநாசி வந்த, 22 வயதுள்ள இரண்டு கர்ப்பிணிகள், பல்லடத்தை சேர்ந்த, 24 வயது பெண் என, 14 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ் கூறுகையில், ''பல்லடம், அவிநாசி, உடுமலை உட்பட பல பகுதிகளில், ஒரே நாளில், 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X