திருப்பூர் மில்லில் பயங்கர தீ | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மில்லில் பயங்கர தீ

Added : ஜூன் 27, 2020
Share
 திருப்பூர்  மில்லில் பயங்கர தீ

திருப்பூர்:திருப்பூரில், ஓ.இ., மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் நாசமானது.திருப்பூர், காங்கயம் ரோடு, அமர்ஜோதி கார்டனை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் காசிபாளையத்தில் வாடகை கட்டடத்தில் பழைய வேஸ்ட் துணிகளை அரைத்து பஞ்சாக்கும் ஓ.இ., மில் நடத்தி வருகிறார். நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மாலை, 6:30 மணியளவில், திடீரென மெஷினில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே, தொழிலாளர்கள் அதை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் தீ மளமளவென பிடித்து எரிய ஆரம்பித்தது.தகவலறிந்த, திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால், தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. காரணம் குறித்து, ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X