தமிழ்நாடு

ரேஷன் ஊழியர்களை மாற்றாதீர்! இணை பதிவாளர்களுக்கு அறிவுரை

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
ரேஷன் ஊழியர்களை மாற்றாதீர்! இணை பதிவாளர்களுக்கு அறிவுரை

கோவை:'கொரோனா' நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் இச்சமயத்தில், ரேஷன் கடை ஊழியர்களை இட மாற்றம் செய்வதை தவிர்க்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா' தொற்று காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போதும், தமிழக அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் பணியையும், கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கும் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர். 'அதனால், தேவை ஏற்படும் இடங்களை தவிர, ரேஷன் கடை ஊழியர்களை இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
பதிவாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள மற்றொரு உத்தரவில், 'தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல, லாரி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி சேர்க்கப்படுகிறது. 'ஆனால், ஒவ்வொரு முறை கடையில் பொருட்கள் இறக்கும்போது, ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி கூலி வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இறக்கு கூலி வசூலிப்பதை தடுத்து நிறுத்துங்கள்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X