'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் மாநாடு 'ஆசியான்' நாடுகளுக்கு உதவ முடிவு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
ASEAN Summit, ASEAN, COVID19, coronavirus fund

ஹனோய் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று நடந்த 'ஆசியான்' மாநாட்டில், தென்கிழக்காசிய நாடுகளுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசால் தென்கிழக்காசிய நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக இந்தோனேசியாவில், 50 ஆயிரித்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நெருக்கடி காரணமாக, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், ஆசியான் எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு, வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று நடந்தது. இந்த மாநாட்டிற்குப் பின், வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரசால், இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்தும், மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவ, மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை கொள்முதல் செய்வதற்கு தேவையான நிதி, உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். தென் சீன கடல் பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்க, அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.

நிதியுதவி திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக, 75.6 லட்சம் ரூபாயை, நன்கொடையாக வழங்குவதாக தாய்லாந்து அறிவித்து உள்ளது. ஆசியான் கூட்டாளி நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள், தங்கள் பங்களிப்பை விரைவில் அறிவிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X