பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலத்தில் ஜமாபந்தி முகாம்வருவாய் கணக்குகள் ஒப்படைப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் தாலுகா ஜமாபந்தி முகாமில், துணை கலெக்டர் முன்னிலையில் வருவாய்த்துறை கணக்குகள் ஒப்படைக்கப்பட்டன.

ஜமாபந்தி முகாமில், குறுவட்டங்கள் வாரியாக கிராம மக்களிடம் மனுக்கள் பெற்று, உடனுக்குடன் தீர்வு காணப்படும். இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது மக்கள் ஆன்லைனில் மனுக்களை கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜமாபந்தி நாளில் அந்தந்த தாலுகா வருவாய்த்துறை கணக்குகளை, ஜமாபந்தி அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில், துணை கலெக்டர் வெற்றிவேல், வருவாய்த்துறை அலுவலர்களிடம் இருந்து நடப்பாண்டு வருவாய் கணக்குகளை பெற்றுக் கொண்டார்.

தாசில்தார் கவியரசு, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜான்சி, துணை தாசில்தார்கள் பூர்ணிமா, வேல்முருகன், வட்ட வழங்கல் அலுவலர் தனபதி உட்பட வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் உடனிருந்தனர்.வருவாய்த்துறை அலுவலர்கள் முக கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X