இந்தியா

மீனவர்கள் படகில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி, : அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டி, மீனவர்கள் கடலில் படகுகளில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தில் தொழிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்படும் மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 வழங்கப்பட்டு வருகிறது.ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு, தடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது என்ற அரசின் விதிமுறையை சுட்டிக்காட்டி, கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கவில்லை.இதைக் கண்டித்தும், ஓய்வூதியம் பெறும் மீனவர் களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தினர்.மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், கவர்னரை கண்டித்து கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பேடி நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் வழங்கினார். ஆனால், பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டது.இதனைக் கண்டித்து, புதுச்சேரி மீனவர்கள் நேற்று காலை 9:00 மணிக்கு, தலைமைச் செயலகம் எதிரில் படகுகளுடன் திரண்டு, கருப்பு கொடி ஏந்தி கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில், காங்., எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி கலந்து கொண்டனர்.மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், காந்தி வீதியில் உள்ள மீன் மார்க்கெட் வெறிச்சோடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X