வடலுார் சிட்கோ தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் உதவுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடலுார் சிட்கோ தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் உதவுமா?

Added : ஜூன் 27, 2020
Share

வடலுார் : வடலுார் சிட்கோ தொழிற்பேட்டையில், தொழிற்சாலைகளை முழு வீச்சில் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடலுார் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில், 27 ஏக்கர் பரப்பளவில், 36 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. உணவு பொருட்கள், செராமிக், ஆஷ் பிரிக்ஸ், ப்ளாஸ்டிக் கழிவு ஏற்றுமதி உள்ளிட்ட பல வகையான தொழிற்சாலைகளில், 600 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வடலுார் சிட்கோ தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன. உற்பத்தி செய்யும் பொருட்களை வெளி இடங்களுக்கு அனுப்பவதில் சிக்கல் உள்ளதால், சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை.

ஒரு சில தொழிற்சாலைகளில் மிக குறைந்த தொழிலாளர்கள் கொண்டு குறைந்த உற்பத்தி செய்யப்படுகிறது.தொழிற்சாலைகள் தடையின்றி இயங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் செய்ய வேண்டும் என, தொழிற்சாலைகள் நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சில தொழிற்சாலைகள் நிர்வாகத்தினர் கூறுகையில், அரசு கூறியுள்ள விதிமுறைகளின்படி, ஓரிரு தொழிற்சாலைகள் மிக குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்து வருகின்றன. தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி வேண்டும்.

சிறு தொழிற்சாலைகள் என்பதால், எங்கள் தரப்பில் அதை செய்ய இயலவில்லை. மேலும், மிக குறைந்த அளவில் சரக்கு பரிமாற்றம் நடப்பதால், உற்பத்தியாகும் பொருட்களை அதிக விலை கொடுத்து தான் ஏற்றுமதி செய்ய முடியும்.சிப்காட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மிகவும் நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உதவ முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X