இந்தியா

தடை செய்த பாலித்தீன் பை தயாரிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பாகூர் : தடை செய்யப்பட்ட அளவுகளில் பாலித்தீன் பை உற்பத்தி செய்த கம்பெனியை கொம்யூன் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரியில், 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் தடை விதித்துள்ளது.அதனையும் மீறி, குறைவான மைக்ரான் தடிமன் கொண்ட பாலித்தீன் பைகள் விற்பனை செய்வதாகவும், இந்த வகை பாலித்தீன் பைகளை தவளக்குப்பம் அடுத்த கொருக்குமேடு பகுதியில் இயங்கி வரும் கம்பெனியில், உற்பத்தி செய்வதாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு புகார் சென்றன.அதன்பேரில், ஆணையர் சவுந்தரராஜன் தலைமையில் இளநிலை பொறியாளர் ரகுராம் மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகள் நேற்று கொருக்குமேட்டில் பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்யும் கம்பெனியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், அரசு தடையை மீறி, 50 மைக்ரானுக்கு குறைவான தடிமனில் பாலீத்தின் பைகள் தயாரிப்பது தெரிய வந்தது.அதனையடுத்து, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், அந்த கம்பெனியை மூடி 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X