ஊராட்சிகளில் விழிப்புணர்வு அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் விழிப்புணர்வு அவசியம்

Added : ஜூன் 27, 2020
Share

வேப்பூர் : நல்லுார் ஒன்றிய ஊராட்சிகளில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்த அவசியமாகியுள்ளது.

வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து கிராமங்களுக்கு வருபவர்களை கண்காணிக்கவும், சுகாதார பணிகள் செய்யவும் ஒன்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஊரடங்கு அமலில் இருந்த போது கைகளை சுத்தம் செய்வது, பாதுகாப்பாக இருப்பது குறித்து நல்லுார் ஒன்றிய அதிகாரிகள், வேப்பூர் ரோட்டரி கிளப், மக்கள் பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தற்போது, சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனால், கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாமல் சமூக விலகல், முக கவசம் அணிவது, தன் சுத்தம் ஆகியவற்றை கடைபிடிக்காமல் மக்கள் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கிராம மக்களிடம் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X