பொது செய்தி

தமிழ்நாடு

செம்மறி ஆடுகள் கிடைகட்ட விவசாயிகள் ஆர்வம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் பகுதி விவசாயிகள் நிலத்தை வளப்படுத்த செம்மறி ஆடுகளை கிடைகட்டுகின்றனர்.

புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளான வயலாமூர், பூவாலை, அலமேல்மங்காபுரம், சேந்திரக்கிள்ளை, பால்வாத்துண்ணான், வேளங்கிப்பட்டு, மணிக்கொல்லை உள்ளிட்ட பகுதி விவசாயிகள், சம்பா சாகுபடிக்கு நேரடி நெல்விதைப்பு அல்லது நடவு செய்யவர்.இப்பகுதி விவசாயிகள் நிலங்களை வளப்படுத்த கால்நடை உரம், மண்புழுஉரம், தழைகள் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர். அனைத்து விவசாயிகளும் கால்நடை உரங்களை வாங்குவதால், கால்நடை உரங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே இப்பகுதி விவசாயிகள் வெளிமாவட்டங்களில் இருந்து, இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்துள்ள செம்மறி ஆடுகளை நிலங்களில் கிடை கட்டுகின்றனர். இதனால் விவசாயிகள் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிலங்களின் பரப்பை பொறுத்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு கிடை கட்டுகின்றனர்.இதனால் புதுச்சத்திரம் பகுதியில் செம்மறி ஆடுகள் கிடை கட்ட விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X