இந்தியா

கொரோனா வார்டு அமைக்க கூடப்பாக்கம் மக்கள் எதிர்ப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

வில்லியனுார் : ஊசுட்டேரி லட்சுமிநாராயண மருத்துவ கல்லுாரியில் கொரோனா வார்டு அமைக்க கூடப்பாக்கம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் ஜிப்மர் மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து ஊசுட்டேரி லட்சுமிநாராயணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் ஆடிட்டோரியத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணியை கல்லுாரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதனையறிந்த கூடப்பாக்கம் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வில்லியனுார்-பத்துக்கண்ணு சாலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியை வேலி அமைத்து தடுத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி., ரங்கநாதன், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் அமைத்த தடுப்பு வேலியை பொதுமக்கள் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X