இந்தியா

அவசியம்! தற்காலிக சிறை அமைப்பது மிக...மத்திய சிறையில் கொரோனா பீதி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 அவசியம்!  தற்காலிக சிறை அமைப்பது மிக...மத்திய சிறையில் கொரோனா பீதி

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் 5 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பிற கைதிகள் மற்றும்வார்டன்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் நிலவி வருகிறது.

புதுச்சேரியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைக்கு கைதிகள் அழைத்து செல்லும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது.சாதாரண வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், போலீஸ் ஸ்டேஷனில் ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட கொடும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மட்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள், 14 நாட்கள் தனிமையில் வைத்து, பின்னர் மத்திய சிறைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதற்காக, கதிர்காமம் அரசு பள்ளி வளாகத்தில் தற்காலிக சிறை உருவாக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டம் கைவிடப்பட்டது.இதனால், குற்ற வழக்கி்ல கைது செய்பவர்களை, கதிர்காமம் கோவிட் மருத்துவமனைக்கு அனுப்பி, கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதன் முடிவு வருவதற்குள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கின்றனர்.இவ்வாறு கோவிட் 19 பரிசோதனை செய்து, சிறைக்கு சென்ற லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் கதிர்காமம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 8 கைதிகளுக்கு கடந்த வாரம் காய்ச்சல், சளி அறிகுறி ஏற்பட்டது. கொரோனா பரிசோதனையில் உட்படுத்திய பின் மீண்டும் சிறையில் அடைத்தனர். பரிசோதனை முடிவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் மூவரும் கோவிட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இடைப்பட்ட காலத்தில் மூன்று கைதிகளுடன் தொடர்பில் இருந்த வார்டன்கள் மற்றும் கைதிகளுக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.சிறையில் தற்போது 170 தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 40 வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அங்கு பணியாற்றும் வார்டன்கள், சிறை ஊழியர்களுக்கும், அவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்றும் அபாயம் உள்ளது.

இதனால், சிறை வார்டன்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அச்சத்தில் உள்ளனர்.தமிழகத்தை பின்பற்றப்படுமாதமிழகத்தில் கைது செய்யப்படும் நபர்கள் 14 நாட்கள், தனிமைப்படுத்தும் விதமாக, கிளை சிறைகளில் (சப் ஜெயில்) அடைக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்த பின் மத்திய சிறைக்கு மாற்றப்படுகின்றனர். புதுச்சேரியில் சப் ஜெயில் இல்லாததால், நேரடியாக காலாப்பட்டு மத்திய சிறைக்கு செல்கின்றனர்.இதனை தவிர்க்க, விசாரணை கைதிகளை 14 நாள் தனிமைப்படுத்தி வைக்க புதுச்சேரியில் உடனடியாக தற்காலிக சிறை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X