இந்தியா

சட்டசபை ஊழியர்களுக்கு உணவருந்தும் கூடம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : சட்டசபையில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உணவருந்தும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது

.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள், துணை சபாநாயகர், முதல்வரின் பார்லிமெண்ட் செயலர், அரசு கொறடா உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்துள்ளன. மேலும், சட்டசபை செயலகம், அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களும் செயல்படுகின்றன.இங்கு பணியாற்றும் ஊழியர்கள், சட்டசபை வளாகத்தின் வடக்கு பகுதியில், முதல்வர் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள இடத்தில் மதிய நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். இங்கு போதுமானவசதிகள் இல்லாமல்இருந்தது.இதையடுத்து, ஏற்கனவே உள்ள மேஜைகளுடன், தடுப்புகள் அமைக்கப்பட்டு உணவருந்தும் கூடம் மாற்றப்பட்டுள்ளது. ஊழியர்கள் உணவருந்தும் புதிய உணவு கூடத்தை, சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று பார்வையிட்டார். சட்டசபை செயலர் முனிசாமி உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X