தமிழ்நாடு

ஜரூர்! மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு பணி...நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 ஜரூர்! மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு பணி...நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது

கடலுார் மாவட்டம், நல்லவாடு முதல் தா.சோ.பேட்டை வரை 49 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய 57.5 கி.மீ., நீளம் வரை கடற்கரை கொண்டது.

மாவட்டத்தில் மொத்தம் 250 விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள், கட்டுமரங்கள் உட்பட 2,500 படகுகள் உள்ளன. 50 ஆயிரம் மீனவர்களில் 24 ஆயிரம் பேர் நேரடியாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 15 ஆயிரம் மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகு மீன்பிடி துறைமுகங்கள் கடலுார் முதுநகர், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மற்றும் முடசல்ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்., திட்டு, பேட்டோடை உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மீன்பிடி தளங்களும் உள்ளன.

இப்பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் 25 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு, உள்ளூர், வெளி மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மீன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.தற்போது, கடலுார், முதுநகர் துறைமுகப் பகுதியில் மீன்பிடி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இதில், போதிய இட வசதி இன்மை, வாகனங்கள் வந்து செல்ல தரமான சாலை வசதிகள் இல்லையென புகார் எழுந்தது.

மறுசீரமைப்பு : இந்நிலையில், கடலுார் முதுநகரில், மீன்வளத்துறை அலுவலகம் அருகே கெடிலம் ஆற்றில் மீனவர் கட்டமைப்பு வளர்ச்சி நிதி (எப்.ஐ.டி.எப்) 100 கோடி ரூபாய் மதிப்பில், அங்கு ஏற்கனவே இருந்த மீன்பிடி துறைமுகத்தில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் துவங்கியது.இங்கு 'ப' வடிவில் 1.3 கி.மீ., நீளம் வரை மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருகிறது. இதில், 400 படகுகள் வரை நிறுத்தும் வகையில் படகு அணையும் தளம், மீன் ஏல கூடங்கள், ஓய்வு அறை, ஐஸ் லேன், டீசல் பங்க், வலை பின்னும் கூடம், நீர்தேக்கத் தொட்டி, படகுகள் பழுது பார்க்கும் இடம், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டரை மாதங்கள் வரை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் பணிகள் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 15 சதவீத பணிகள்முடிந்துள்ளன.ல்இரண்டு ஆண்டுகளில் அனைத்து பணிகளும் முடிவடையும் என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X