இந்தியா

திறப்பு விழாவுக்கு தயாராகும் மேரி ஹால் கலெக்டர் அருண் பார்வையிட்டார்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மேரி ஹால் கட்டுமானப் பணிகளை, கலெக்டர் அருண் நேற்றுஆய்வு செய்தார்.

பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில், புதுச்சேரி கடற்கரை சாலையில் 'மேரி ஹால்' கட்டப்பட்டது. 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கட்டடம், சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வந்தது. கடந்த காலத்தில் ஓட்டலாக இருந்த மேரி ஹால், சுதந்திரத்திற்கு பின், நகரமன்ற அலுவலகம் இயங்கியது. கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த பிரமாண்ட ஹாலில் நகரமன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.சரியான பராமரிப்பு இல்லாததால், காலப்போக்கில் மேரி ஹால் கட்டடம் பழுதடைந்தது. பழமையின் அருமையை உணர்ந்து பராமரிக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சவுக்குக் கழிகளை கொண்டு முட்டுக் கொடுத்து சமாளித்து வந்தனர்.2014ம் ஆண்டு நவம்பர் மாதம் மேரி ஹால் இடிந்தது.

அந்த இடத்தில் பழைய கட்டடம் போன்றே பழமை மாறாமல் புதிய கட்டடம் கட்ட அரசு முடிவு செய்தது.உலக வங்கி கடனுதவியுடன், திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.14.83 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணி, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.ஆனால், பணிகள் திட்டமிட்டப்படி முடிக்காப்படாமல் இழுபறி ஏற்பட்டது.திட்ட அமலாக்க முகமையின் திட்ட இயக்குனரான கலெக்டர் அருண், மேரி ஹால் கட்டுமானப் பணிகளை கடந்த மார்ச் மாதம் பார்வையிட்டு, பணிகளை வேகப்படுத்தஉத்தரவிட்டார். ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் வேகம் எடுத்தன. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து, வெள்ளையடிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், மேரி ஹாலை கலெக்டர் அருண் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முடிந்துள்ள பணிகள் குறித்து, திட்ட அமலாக்க முகமையின் அதிகாரிகள் விளக்கி கூறினர். முடிக்கப்படாமல் உள்ள 10 சதவீத பணிகளை விரைந்து முடித்திட கலெக்டர் உத்தரவிட்டார். பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், மேரி ஹாலுக்கு விரைவில் திறப்பு விழா நடத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X