இந்தியா

முக கவசம், கபசுர குடிநீர் இலவசமாக வழங்க கோரிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அனைத்து குடும்பத்திற்கும் முககவசம், கபசுர குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என பா.ஜ. மாநில தலைவர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதல், மக்கள் வேலையின்றி வறுமையில் வாடி வருகின்றனர். கிடைக்கும் சிறிய வேலையை செய்ய இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, முக கவசம் அணியவில்லை என காரணம் காட்டி, ரூ. 200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித ஆக்கப்பூர்வமான உதவிகளை மேற்கொள்ளாத அரசு, மக்களை சுரண்டும் இச்செயலை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் நிவாரண நிதி, மதுபானங்கள் மீது பல மடங்கு வரி, பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி என வரி வசூல் செய்யும் அரசு, உடனடியாக அனைத்து குடும்பத்திற்கும் இலவசமாக முக கவசம், கபசுர குடிநீர் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X