பொது செய்தி

தமிழ்நாடு

இணைய தளம் மூலம் ஜமாபந்தி மனுக்கள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இணைய தளம் மூலமாக மட்டுமே ஜமாபந்தி மனுக்களை பதிவு செய்யலாம் என, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கலெக்டர் அன்புசெல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில், 2019-2020 ஆண்டிற்கான ஜமாபந்தி கடந்த 26ம் தேதி துவங்கியது. புவனகிரியில் கலெக்டர் அன்புச்செல்வன், கடலுாரில் டி.ஆர்.ஓ., ராஜகிருபாகனர், சிதம்பரத்தில் சப் கலெக்டர் விசுமகாஜன், திட்டக்குடியில் விருத்தாசலம் சப் கலெக்டர், பண்ருட்டியில் கடலுார் ஆர்.டி.ஓ., குறிஞ்சிப்பாடியில் கடலுார் தனித்துணை ஆட்சியர், வேப்பூரில் கலெக்டரின் கூடுதல் நேர் முக உதவியாளர், காட்டுமன்னார் கோவிலில் தாட்கோ மேலாளர், விருத்தாசலத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், ஸ்ரீமுஷ்ணத்தில் கடலுர் தனித்துணை ஆட்சியர் ஆகியோர் நடத்துகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஜமாபந்தியில் மனுக்கள் பெறும் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மனு அளிக்க, தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை என, அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. புதிய நடைமுறைப்படி, வரும் 29ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் மனுதாரர்கள் பசலி 1429 (2019-2020) வருவாய் தீர்வாய மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi என்ற வலை தளத்தில் இணைய தள வழியில் மட்டுமே தாமாக அல்லது இ-சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

ஜூலை 15ம் தேதி வரை பதிவு செய்யப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களும் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X