இந்தியா

அவசர நிலை உத்தரவாத கடன் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அவசர நிலை உத்தரவாத கடன் வழி திட்ட செயல்பாடுகள் குறித்து, வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மத்திய அரசின் நிதி அமைச்சகம் அமல்படுத்திய அவசர நிலை உத்தரவாத கடன் வழி திட்டம் குறித்து (இ.சி.எல்.ஜி.எஸ்) வங்கி அளவிலான கூட்டம், புதுச்சேரியில் மாவட்ட தொழில் மைய தொழிற்பயிற்சி கூடத்தில் நடந்தது.தொழில் மற்றும் வணிகத்துறை செயலர் சரண் தலைமை தாங்கினார். தொழில்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இந்தியன் வங்கி முன்னோடி மாவட்ட மேலாளர் உதயக்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அன்பழகன் மற்றும் வங்கியாளர்கள் பங்கேற்றனர்.தொழில்துறை செயலர், வங்கி மற்றும் அதிகாரிகளை வரவேற்று பேசுகையில், வங்கிகளுக்கு தேவைப்படும் ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கும் என உறுதியளித்தார்.

மேலும், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், முத்ரா மற்றும் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் பெற்ற பயனாளிகளுக்கு அவசர கால கடன் உதவி திட்டத்ததின் கீழ் மேலும் நிதி உதவிஅளிக்க கேட்டுக் கொண்டார்.வங்கிகள் அவசர நிலை உத்தரவாத கடன் வழி திட்டத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்த தொழில்துறை இயக்குநர், அனைத்து பயனாளிகளுக்கும் விரைவாக கடன் வசதி திட்டத்தை செயல்படுத்திட கேட்டுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X