இந்தியா

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் பரவி வரும் கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட புதுச்சேரி மாநில செயற்குழுவின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுடனான கொரோனா ஆலோசனைக் கூட்டம் சட்டசபை கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் புதுச்சேரி யில் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நல அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாநில செயற்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

தலைமைச் செயலர் அஸ்வனி குமார் உள்ளிட்ட அனைத்து துறை அரசு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு, மாநிலத்திற்குள் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 25 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டு வருகிறது.இதனால் அரசு, கடைகள் திறக்கும் நேரத்தை மீண்டும் குறைத்து ஊரடங்கினை அமல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் வேகம் குறையவில்லை.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், எந்த மாதிரியான கட்டுபாடுகளை கூடுதலாக விதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X