பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோர் 10 பயனாளிகளுக்கு கடனுதவி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கொரோனா சிறப்பு நிதியின் மூலம் தொழில் முனைவோர் 10 பயனாளிகளுக்கு, ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில், தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்கள் என 10 பயனாளிகளுக்கு, கொரோனா சிறப்பு நிதி தொகுப்பு மூலம், ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.புத்தாக்க திட்ட செயல் அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு முன்னிலை வகித்தனர்.

வட்டார அணி தலைவர் பிரகாசமணி வரவேற்றார். 10 பயனாளிகளுக்கு, ரூ.2, லட்சத்து 60 ஆயிரம் கடனுதவியை சேர்மன் கருணாநிதி வழங்கினார்.விழாவில், புத்தாக்க திட்ட செயல் அலுவலர்கள் ரமேஷ், சதீஷ், எஸ்.ரமேஷ் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். வட்டார செயலர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X