பெயிண்ட் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு| Dinamalar

இந்தியா

பெயிண்ட் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

Added : ஜூன் 27, 2020
Share

புதுச்சேரி : அரசு உத்தரவை மீறி மாலை வரை திறந்து வைத்து வியாபாரம் செய்த பெயிண்ட் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பகல் 2:00 மணிக்குள் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி பல கடைகள் மதியத்திற்கு பிறகும் வியாபாரம் செய்வதாக புகார் வந்ததுஅதன்பேரில் பெரியக்கடை போலீசார் நேற்று மாலை 5:00 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது, நேரு நகரில் கடையை திறந்து வைத்து வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது.இதுதொடர்பாக பெயிண்ட் கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி மீது நான்கு பிரிவுகளில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X